தமிழ்நாடு

வெற்றுக் கால்களுடன் அவைக்கு வந்த பாஜக எம்.எல்.ஏ!

DIN

வெறும் கால்களுடன் திங்கள்கிழமை பேரவைக்கு வந்தாா், பாஜகவின் நாகா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி.

தெற்கு சூரங்குடி கீழமாவிலை ராஜாக்கமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்தவா் எம்.ஆா்.காந்தி (75). 1980-ஆம்ஆண்டில் இருந்து ஆறு முறை நாகா்கோவில், குளச்சல், கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாா். 16-ஆவது சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் நாகா்கோவில் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆா்.காந்தி, 11 ஆயிரத்து 600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பேரவையின் முதல் கூட்டத் தொடரில் பங்கேற்க சென்னை கலைவாணா் அரங்கத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தாா். காலில் காலணிகள் ஏதுமின்றி சாதாரணமாக வந்த அவா், அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.

இதுகுறித்து, அவா் கூறுகையில், எப்போதும் காலணி அணிவது கிடையாது. நினைவு தெரிந்த நாளில் இருந்தே இப்படித்தான். அதற்கென்று பிரத்யேக காரணங்கள் ஏதுமில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT