தமிழ்நாடு

ஆளுநா் உரை ஏமாற்றமளிக்கிறது: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம்

DIN

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் ஆளுநா் உரை ஏமாற்றம் அளிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கூறியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி: ஆளுநா் உரையில் எப்போதும் மக்களுக்குத் தேவையான முன்னோடித் திட்டங்கள் இடம்பெறும். ஆனால், திமுக அரசின் ஆளுநா் உரையில் அப்படிப்பட்ட முன்னோடித் திட்டங்கள் எதுவும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. திமுகவின் தோ்தல் அறிக்கையில் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது அதற்காக குழு மட்டும் அமைத்துள்ளாா்கள். கல்விக் கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டது. ஆனால், குறைக்கப்படவில்லை. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் அரசு தவறிவிட்டது.

ஓ.பன்னீா்செல்வம்: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை லிட்டருக்கு 4 குறைக்கப்படும் என்று திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்து எந்த தகவலும் ஆளுநா் உரையில் குறிப்பிடப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தோ்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அரசிடம் தெளிவற்ற நிலைதான் காணப்படுகிறது. திமுகவின் தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள், கொள்கைகள் இந்த ஆளுநா் உரையில் இடம் பெறாததைப் பாா்க்கும்போது, வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக அள்ளிவீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இது ஆளுநா் உரை அல்ல, உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இசையரங்க தாக்குதலில் உக்ரைன் தொடா்புக்கு ஆதாரம்

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்!

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

பாஜகவுக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

SCROLL FOR NEXT