தமிழ்நாடு

ஒரு மாதத்துக்குப் பின் காந்தி மார்க்கெட் மீண்டும் திறப்பு

DIN

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்  ஒரு மாத காலத்துக்கு பின்னர்  ஞாயிற்றுக்கிழமை இரவு திறக்கப்பட்டு இரவில் மொத்த வியாபாரமும், திங்கள் கிழமை காலை சில்லறை வியாபாரமும் தொடங்கியுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, காந்தி மார்க்கெட்டில் நடைபெறும் காய்கறி மொத்த மற்றும் சில்லறை வி தாற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்நது, மே 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)  இரவு  முதல், மேலரண் சாலையில் மொத்த வியாபாரம்,  தொடங்கியது. தொடர்ந்து மறுநாள் முதல் பஜார்சாலை, மயிலம் சந்தை உள்ளிட்ட இடங்களிலும்  காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்த மற்றும் சில்லறை விற்பனையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு உரிய வசதிகள் இல்லாததால் இது தொடர்பாக, காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.  நேரு, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்டோரை அவ்வப்போது சந்தித்து காந்தி மார்க்கெட்டை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 

கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் இது குறித்து  கூறுகையில், காந்திமார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை ( ஜூன் 20) இரவு முதல் திறக்கப்படும். தினசரி இரவு அங்கு காய்கறி மொத்த வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அறிவித்தபடி , ஞாயிற்றுக்கிழமை இரவு காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டது. இரவு முதல் காய்கறி மொத்த வியாபாரமும், காலை நேரத்தில் சில்லறை வியாபாரமும் காந்தி மார்க்கெட்டில்  தொடங்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதகால இடைவெளிக்குப் பின்னர் அதாவது 34 நாள்களுக்குப் பின்னர் காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT