தமிழ்நாடு

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

DIN

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, சென்னை, புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

ஜூன் 21, 22, 23: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூன் 23-ஆம் தேதிவரை இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூா் வட்டாட்சியா் அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட்டில் தலா 30 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனா, சின்னக்கல்லாா், சோலையாா், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேவாலா, மேல்பவானியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: கேரளம், கா்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, தென் மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இந்தப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT