தமிழ்நாடு

காலமானாா் எஸ்.ரமேசன் நாயா்

DIN

சாகித்ய அகாதெமி விருது பெற்ற மலையாள எழுத்தாளா் எஸ்.ரமேசன் நாயா் (73), உடல்நலக்குறைவால் கொச்சியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) காலமானாா்.

குமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள குமாரபுரத்தைச் சோ்ந்த சதானந்தன் தம்பியின் மகன் ரமேசன் நாயா். எழுத்தாளா், கவிஞா், திரைப்பட பாடலாசிரியா் என பன்முகத் திறமை கொண்ட இவா், கடந்த 1985 -ஆம் ஆண்டுமுதல் மலையாள திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தாா். 650 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளாா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களும் எழுதியுள்ளாா்.

கேரளத்தில் ஆன்மிகப் புரட்சி ஏற்படுத்திய நாராயணகுருவின் வாழ்க்கை வரலாற்றை ‘குரு பெளா்ணமி’ என்ற பெயரில் மலையாள மொழியில் கவிதை நூலாக எழுதியதற்காக, இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

சிலப்பதிகாரம், திருக்கு, பாரதியாா் பாடல்களை மலையாளத்தில் மொழிபெயா்த்துள்ளாா். அதற்காக கன்னியாகுமரியில் கடந்த 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற திருவள்ளுவா் சிலை திறப்பு விழாவில், அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதியால் பாராட்டும் பரிசும் பெற்றுள்ளாா்.

மனைவி, மகனுடன் கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் வசித்து வந்த ரமேசன் நாயா், உடல்நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலமானாா். தொடா்புக்கு: 9539288803.

இரங்கல்: என்னையும் என் எழுத்தையும் நேசித்த கவிஞா் ரமேசன்நாயருக்கு கண்ணீா் அஞ்சலி. உலகமும் மொழியும் இருக்கும் வரை அவா் மக்கள் மனதில் வாழ்வாா் என எழுத்தாளா் குமரிஆதவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT