தமிழ்நாடு

சென்னை எழும்பூரில் குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையம்: முதல்வர் ஆய்வு

20th Jun 2021 04:31 PM

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதன் காரணமாக, மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் வெகுவாகக் குறைந்து, நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றின் மூன்றாவது அலையைச் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஒரு பகுதியாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (20.6.2021) சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் குழந்தைகளுக்கென 250 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரத்யேக பூஜ்ஜிய தாமத (Zero delay) குழந்தைகள் கரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவையும் முதல்வர் பார்வையிட்டார். இப்பிரிவுகளில் குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து மருத்துவக் கருவிகளும், ஆக்சிஜன் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வின்போது, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு, குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் எழிலரசி ஆகியோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT