தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அறிவிப்பு

20th Jun 2021 06:04 PM

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் 50% பயணிகளுடன் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் முதற்கட்டமாக நாளை(ஜூன் 21) முதல் காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும். பின்னர் தேவைக்கேற்ப நேரம் மாற்றம் செய்யப்படும். 

மக்கள் அதிகம் பயணிக்கும் உச்ச நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்படும்.

அதன்படி காலை 9 முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் 7 மணி வரை 5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT