தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில்  சுமார் 1000-க்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தல்: அமைச்சர் ஆய்வு

19th Jun 2021 03:23 PM

ADVERTISEMENT


அருப்புக்கோட்டை திருநகரத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தடுப்பூசி  முகாமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தொடக்கிவைத்து முகாம் பணிகளை ஆய்வு செய்தார்.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் விஏஎஸ் அண்ணாமலை திருமண மண்டப வளாகத்தில்  சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை  வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமை வகித்துத்தொடக்கி வைத்ததுடன்,முகாம் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இதையும் படிக்கலாமே.. சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம் (விடியோ)

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற  18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கான சிறப்புத் தடுப்பூசி முகாமிற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார்.

ADVERTISEMENT

முன்னாள் நகர்மன்றத்தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகரச்செயலாளர் ஏ.கே.மணி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.கே.எஸ்.வி.டி.சுப்பாராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, தடுப்பூசி செலுத்தும் முகாம் பணிகளை ஆய்வு செய்து, முகாமில் கையாளப்படும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்களை அமைச்சர் இராமச்சந்திரன் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டியன், பள்ளிகள் மருத்துவ அலுவலர் ராஜேஸ் கண்ணன், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் கோமதி, மருத்துவர் விஜயலஷ்மி ஆகியோரது மேற்பார்வை மற்றும் ஆலோசனைப்படி பயனாளிகளுக்கு செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர். 

இதையும் படிக்கலாமே.. பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

மொத்தம் சுமார் 1000க்கு மேற்பட்டோர்  தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். உடன் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், இராஜபாண்டி, அய்யப்பன், உள்ளிட்டோரும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அலுவலர்களும் நேரில் கலந்து கொண்டனர்.

Tags : coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT