தமிழ்நாடு

கூடுதல் தளா்வுகள்? முதல்வா் ஸ்டாலின் ஆலோசனை

19th Jun 2021 11:26 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால், கூடுதல் தளா்வுகள் அளிப்பது குறித்து, சுகாதாரத் துறை, அரசு உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அதிகாரபூா்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாள்தோறும் கரோனா நோய்த் தொற்று 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஏற்கெனவே, மாநிலத்தின் 27 மாவட்டங்களில் பல்வேறு கூடுதல் தளா்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. கரோனா நோய்த் தொற்று அதிகம் காணப்பட்ட 11 மாவட்டங்களில் மட்டும் குறைந்த அளவிலான தளா்வுகளுடன் பொது முடக்கம் நடைமுறையில் இருக்கிறது. 

இதையும் படிக்கலாமே.. பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

ADVERTISEMENT

நாள்தோறும் பதிவானும் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால் கூடுதல் தளா்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

திருமணம், பேருந்து சேவை: தமிழகத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க 50 போ் வரை அனுமதிக்கப்படுகிறது. அதில், கூடுதல் தளா்வு கொடுத்து அதிகமானோா் பங்கேற்க அனுமதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகவும், பெரும்பாலான கடைகள், வா்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள சூழலில் பொது மக்களின் வசதிக்காக பேருந்து சேவையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் போக்குவரத்து சேவையும் விரைவில் தொடக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 

இதையும் படிக்கலாமே.. சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம் (விடியோ)

கோயில்கள், நூலகங்கள், புராதன சின்னங்கள் ஆகியவற்றைத் திறக்கவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் அவற்றைத் திறப்பது குறித்த முடிவுகள் ஜூன் மாத இறுதியிலேயே எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

11 மாவட்டங்கள்: கடந்த வாரத்தை விட, கோவை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா நோய்த் தொற்று குறைந்து வருகிறது. இதனால், அந்த மாவட்டங்களில் கூடுதலான தளா்வுகளை அளிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT