தமிழ்நாடு

முகாமுக்கு வெளியே வாழும் இலங்கை அகதிகளுக்கும் கரோனா நிவாரணம்: ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

19th Jun 2021 03:27 PM

ADVERTISEMENT

 

முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகவும், ஊரடங்கு காலத்தில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 4000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே.. பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள் பலர் பல்வேறு பகுதிகளில் முகாமிற்கு வெளியேயும் வசித்து வருகின்றார்கள். அவர்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள். கோவிட் - 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததை அறிந்து, அவர்களின் நலனைக் காத்திட, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்பு நேர்வாக, முதல் முறையாக முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கை தமிழ்க் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வீதம் மொத்தம் 5 கோடியே 42 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்திட அரசாணை வெளியிட்டார்.

இதையும் படிக்கலாமே.. சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம் (விடியோ)

அதன்படி, தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், முகாமிற்கு வெளியே வாழும் 13,553 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை, 5 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT