தமிழ்நாடு

நீட் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவிடம் முறையிடுக: நடிகர் சூர்யா

19th Jun 2021 02:48 PM

ADVERTISEMENT


நீட் தேர்வின் பாதிப்பின் தீவிரத்தை, நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என நடிகரும், அகரம் அறக்கட்டளை நிறுவனருமான சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாயப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே ஒரு தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.

இதையும் படிக்கலாமே.. பிகார் பெண்ணுக்கு 5 நிமிட இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்திய பரிதாபம்

தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.

ADVERTISEMENT

மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவிடம் neetimpact2021@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தியுள்ளார்.

சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை..
 

இதையும் படிக்கலாமே.. சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம் (விடியோ)

ADVERTISEMENT
ADVERTISEMENT