தமிழ்நாடு

நெடுஞ்சாலைத் துறைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ. வேலு

18th Jun 2021 06:15 PM

ADVERTISEMENT

 

தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை இராஜீவ் காந்தி சாலையில் ரூ.108.13 கோடி மதிப்பில் இந்திரா நகர் சாலை சந்திப்பு டைடல் பார்க் சந்திப்புகளில் நடைபெற்றுவரும் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகளை “யு” வடிவ மேம்பாலங்கள், இசிஆர் சாலைப்பிரிவில் நடைமேம்பாலம், பக்கிங்காம் கால்வாய் குறுக்கே கட்டப்படும் கூடுதல் பாலம் ஆகியவற்றினை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்திட அறிவுரை வழங்கினார்.

சென்னை பெருநகர எல்லைக்குள் இராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைபாக்கம் சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை சுங்கச் சாவடிகளை ஆய்வு செய்து அவற்றில் பொதுமக்கள் சந்திக்கும் குறைகளை களைய தேவையான நடவடிக்கை எடுக்க தகவல் தொழில்நுட்ப விரைவுச் சாலை நிறுவனத்திற்கு உத்திரவிட்டார்.

ADVERTISEMENT

தேசிய நெடுஞ்சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் ரூ.234 கோடியில் நடைபெற்றுவரும் இரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைபடுத்தி முடிக்க அறிவுறுத்தினார்.

சென்னை வெளிவட்ட சாலையில் ரூ.1081 கோடியில் முடிக்கப்பட்ட சாலைப்பணிகளைஆய்வு செய்து தடைப்பட்டுள்ள சிறு சிறு பணிகளை வரைவில் முடிக்கவும், இச்சாலையில் கட்டமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிக்களையும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்து பொது மக்கள் எவ்வித சிரமத்திற்கும் ஆளாகாமல் சுங்க சாவடிகளை கடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும் போது “சென்னை மாநகரில் மத்திய கைலாஸ் முதல் சிறுச்சேரி வரை முக்கியமான 5 சாலைகளின் சந்திப்பில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு 2010 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்து அதற்கான நிதியையும் தி.மு.க அரசு ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டது. வளர்ந்து வரும் சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலையும் பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவும் மீண்டும் மத்திய கைலாஸ் முதல் சிறுச்சேரி வரை முக்கிய 5 சாலைகளின் சந்திப்பில் சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்பாலங்கள் கட்ட அலுவலர்களுடன் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர எல்லைக்குள் சுங்கச் சாவடி தேவையில்லை எனவும் அதை அகற்ற வேண்டும் எனவும் கடந்த காலங்களில் பொதுமக்கள் பெரிய போராட்டங்களை நடத்தினார்கள். சுங்கச் சாவடிகளை அகற்றினால் அரசுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட இழப்புகள் என்ன என்பதை இன்று நேரில் சென்று துறை அலுவலர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் கருத்துக்களை கேட்டறிந்தார். இதுகுறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” எனக் கூறினார்.
 

Tags : velu tn cm tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT