தமிழ்நாடு

நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டம்: தமிழக அரசு தகவல்

DIN

சென்னை: விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் வகையில் நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருப்பதாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மழையில் நனைந்து நெல் வீணாவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், நெல் கொள்முதலுக்காக 468 சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 3 லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். இந்த குடோன்கள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், கொள்முதல் நிலையங்கள், தொலை தூரத்தில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படாத வகையிலும், அவா்களின் போக்குவரத்து செலவு, அலைச்சல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

அப்போது பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா், இதுதொடா்பாக அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், விவசாயிகளின் விளை நிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து வெகு தூரங்களில் உள்ள சிறிய விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT