தமிழ்நாடு

நாகை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில்  தீ: மின் தளவாட பொருள்கள், கோப்புகள்  தீக்கிரை

18th Jun 2021 12:00 PM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் மின் தளவாட பொருள்கள், கோப்புகள்  தீக்கிரையாகின.

நாகப்பட்டினம் உதவி மின் பொறியாளர் அலுவலகம், நாகை வெளிப்பாளையத்தில் இயங்கி வந்தது. இந்தக் கட்டடம் பழுதானதால், இங்கு இயங்கி வந்த அலுவலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நாகை சூர்யா நகருக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், சில கோப்புகள், மின் தளவாடப் பொருள்கள் பழைய கட்டடத்தில் இருந்தன.

இந்த நிலையில், பூட்டி வைக்கப்பட்டிருந்த அந்தக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.

ADVERTISEMENT

தகவலறிந்து விரைந்து வந்த நாகை தீயணைப்புப் படையினர், தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

காற்றின் வேகத்தில் தீயும், புகையும் மேலும் அதிகமானதால், தீயைக் கட்டுப்படுத்துவது,  தீயணைப்பு வீரர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.

இதையடுத்து,  பக்கவாட்டில் இருந்த சுவர்களை இடித்து வழி ஏற்படுத்திய தீயணைப்பு வீரர்கள், கட்டடத்தின் உள்ளே சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர முயற்சிகளுக்குப் பின்னர், தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த தீ விபத்தில், அலுவலகத்தில் இருந்த மின் தளவாடப் பொருள்கள் மற்றும் கோப்புகள் தீக்கிரையாகின. தீ விபத்துக்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை.

Tags : Fire Electrical logistics files fire தீ
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT