தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை டயர் மறுசுழற்சி ஆலையில் பயங்கர தீ

18th Jun 2021 12:28 PM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் டயர் மறுசுழற்சி ஆலையில் வெள்ளிக்கிழமை காலை திடீரென் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அருகே சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எஸ்த்தல் டயர் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது. 

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதாரங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ADVERTISEMENT

Tags : SIPCOT Industrial Estate Gummidipoondi சிப்காட் தொழிற்பேட்டை கும்மிடிப்பூண்டி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT