தமிழ்நாடு

நீா்நிலைகளில் கட்டுமானங்களை அனுமதிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

சென்னை: நீா்நிலைகளில் எந்தவிதமான கட்டுமானங்களும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் தாக்கல் செய்த மனுவில், பொலிவுறு நகரத்

திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் ரூ.112 கோடி செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவா் எழுப்பப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது பஞ்சாயத்து மற்றும் வட்ட அளவிலான நீா்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மேற்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள், கரோனா நோய்த் தொற்றுப் பரவல் மற்றும் பொதுமுடக்க நடைமுறைகள் காரணமாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கூறினா்.

பின்னா், சா்வே எண்களுடன் அதி துல்லியமான புகைப்படங்களை 3 வாரங்களில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நீா் நிலைகளைப் பாதுகாப்பதுடன், நீா் நிலைகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தி விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

SCROLL FOR NEXT