தமிழ்நாடு

இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில், வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடா்பாகசென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக வெள்ளிக்கிழமை, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையைப் பொருத்தவரை வெள்ளி, சனி (ஜூன் 19) ஆகிய நாள்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில், வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 210 மி.மீ., மேல் பவானியில் 120 மி.மீ., எமரால்டில் 110 மி.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 100 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 90 மி.மீ., கோவை மாவட்டம் வால்பாறையில் 80 மி.மீ., சின்கோனாவில் 70 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 60 மி.மீ., நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட்டில் 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டா் வேகத்திலும், வடக்கு ஆந்திரம் மற்றும் ஒடிஸா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்திலும், வடக்கு வங்கக் கடல் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்திலும் வெள்ளிக்கிழமை பலத்த காற்று வீசக்கூடும்.

இதே போல், வெள்ளி, சனி ஆகிய நாள்களில், கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டா் வேகத்திலும், தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT