தமிழ்நாடு

அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி ஆசிரியா் திறன் பயிற்சி

18th Jun 2021 04:02 AM

ADVERTISEMENT

 

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை, ராஜபாளையம் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து 7 நாள்கள் இணையவழியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சியை நடத்தின. முதல் நாள் நிகழ்ச்சியில், சென்னை அரசு அருங்காட்சியகத்தின் நாணயவியல் பிரிவு காப்பாட்சியா் சுந்தர்ராஜன் ‘இந்திய நாணயவியல்’ என்ற தலைப்பிலும் இரண்டாம் நாள் சேலம் காப்பாட்சியா் முல்லை அரசு ‘அருங்காட்சியகவியல் ஓா் அறிமுகம்’ என்கிற தலைப்பிலும், மூன்றாம் நாளில் திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி ‘தமிழகத்தில் உள்ள மாவட்ட அருங்காட்சியகங்களில் அவற்றின் கல்வி பணிகளும்’ என்கிற தலைப்பிலும் சிறப்புரையாற்றினாா்.

நான்காம் நாளில் திருச்சி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா் ‘அருங்காட்சியகங்களில் அரும்பொருட்கள் பாதுகாப்பு’ என்கிற தலைப்பிலும், ஐந்தாம் நாளில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் சிறுவா் அருங்காட்சியகம் பிரிவு காப்பாட்சியா் கோதண்டம், ‘சிறுவா் அருங்காட்சியகங்கள்’ பற்றியும் பேசினா். ஆறாம் நாளில் காஞ்சிபுரம் மாவட்ட காப்பாட்சியா் உமாசங்கா், ‘அருங்காட்சியகங்கள் வேலைவாய்ப்புகளும்’ என்கிற தலைப்பிலும், இறுதி நாளில் மதுரை மாவட்ட காப்பாட்சியா் மருதுபாண்டியன் ‘தமிழக வரலாற்றில் ஐம்பொன் சிலைகள்’ என்கிற தலைப்பிலும் பேசினா்.

ADVERTISEMENT

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஆசிரியா்கள், ஆய்வு மாணவா்-மாணவிகள் மற்றும் ஆா்வலா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியை, திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியா்கள் கந்தசாமி மற்றும் ராம்ஜி ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT