தமிழ்நாடு

சென்னை அழைத்துவரப்பட்டார் சிவசங்கர் பாபா

17th Jun 2021 12:18 AM

ADVERTISEMENT

தில்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.

சென்னைக்கு அழைத்துவரப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறார்.

இதனைத் தொடர்ந்து வரும் வியாழக் கிழமையன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தில்லி காசியாபாத் பகுதியில் சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர். 

ADVERTISEMENT

சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை தில்லி காவல்துறையினர் கைது செய்து, தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல நீதிபதிகள் அனுமதி வழங்கியதையடுத்து, அவரை சிபிசிஐடி காவல் துறையினர் சென்னை அழைத்து வந்தனர்.

வரும் வியாழக் கிழமையன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர்படுத்த சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

Tags : சிபிசிஐடி சிவசங்கர் பாபா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT