தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி

DIN

சென்னை: நடிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் மணிகண்டன். துணை நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தாா் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் அந்நடிகை புகாா் கொடுத்தாா்.

அடையாறு மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என போலீஸ் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்: தற்போது வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். அவருக்கு, முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் மனுதாரா் முன்னாள் அமைச்சா், செல்வாக்கு உள்ளவா். எனவே ஆரம்ப கட்ட நிலையில் உள்ள வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் சரியாக இருக்காது. மனுதாரா் இதுவரை போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக செயல்படவில்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT