தமிழ்நாடு

சேலம் மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்த தகராறில் விவசாயி அடித்துக்கொலை

17th Jun 2021 10:22 AM

ADVERTISEMENTசேலம் மாவட்டம் மேச்சேரி அருகே ஆடுகளை நாய் கடித்த தகராறில் விவசாயி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள கல்கோட்டையைச் சேர்ந்தவர் பொம்ம நாயக்கர் (65). இவரது அண்ணன் தம்ம நாயக்கர் (70). இவர்கள் இருவர் அருகருகே வசித்து வருகின்றனர. பொம்ம நாயக்கர் விவசாயத்துடன் ஆடுகளை வளர்த்து வந்தார். இவரது ஆடுகளை தம்ம நாயக்கரின் வளர்ப்பு நாய்கள் கடித்தால் ஆடுகள் இறந்து போயின. புதன்கிழமை இரவு பொம்மநாயக்கன் தம்ம நாயக்கரின் வீட்டிற்குச் சென்று தனது ஆடுகளை நாய்கள் கடித்து விட்டது நாய்களை கட்டிப்போட்டு வளர்க்க வேண்டியதானே என கேட்டுள்ளார். 

இதில், தகராறு ஏற்படவே தம்ம நாயக்கரின் மகன்கள் சக்திவேல், குமார், மருமகள் ரமணி ஆகியோர் பொம்மநாயக்கனை கட்டையாளும், இரும்பு கம்பியாளும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த பொம்ம நாயக்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தம்ம நாயக்கரின் மகன்கள் சக்திவேல், குமார் மருமகள் ரமணி ஆகியோரை தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Farmer Morder near Salem Mecheri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT