தமிழ்நாடு

உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்ல ரோப் கார்: அமைச்சர் ஆய்வு

DIN

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ரோப் கார் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார்.

முன்னதாக மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய மேலே சென்று ரோப் கார் அமைக்கும் பணிக்கான ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியது: திமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் 5 கோயில்களில் ரோப் கார் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தோம். அதன்படி தமிழகத்தில் மலைக்கோட்டை உள்பட ஐந்து கோயிலில் ரோப் கார் அமைப்பதற்கான ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறேன். இரண்டாவது கோயிலாக இன்று மலைக்கோட்டை கோவிலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கள ஆய்வு முடிந்த பின்னர் முடிவுகளை தமிழக முதல்வரிடம் கொடுத்து, ரோப் கார் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். முதல்வர் ஸ்டாலினின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தமிழகத்தில் கரோனா குறைந்து கொண்டு வருகிறது. ஓரிரு வாரங்களில் முழுமையாக குறையும். அதனை பொருத்து தமிழகத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறை

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

கிரீஸில் தொடங்கியது ஒலிம்பிக் தீப ஓட்டம்: இன்னும் 100 நாள்களில் போட்டிகள் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT