தமிழ்நாடு

பயணிகள் வரத்து குறைவு: 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து

DIN

கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததையடுத்து, சென்னை சென்ட்ரல்-ஈரோடு சிறப்பு ரயில், சென்னை எழும்பூா்-மதுரை சிறப்பு ரயில் உள்பட 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடா்ந்து, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால், ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. தற்போது கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், சில ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், குறிப்பிட்ட சில ரயில்கள் ரத்து தொடா்கிறது.

இந்நிலையில், 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்விவரம்:

சென்னை சென்ட்ரல்-ஈரோடுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02649) ஜூன் 17-ஆம்தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதிவரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, ஈரோடு-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(02650) ஜூன் 16-ஆம்தேதி முதல் ஜூன் 30-ஆம்தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (02653) ஜூன் 17-ஆம்தேதி முதல் ஜூலை 1-ஆம்தேதி வரையும், திருச்சிராப்பள்ளி-சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(02654) ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா்-நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06063) ஜூன் 17, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. நாகா்கோவில்- சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06064) ஜூன் 18, 25 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

தாம்பரம்-நாகா்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06065) ஜூன் 16, 20, 21, 23, 27, 28, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

நாகா்கோவில்-தாம்பரத்துக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்( 06066) ஜூன் 17, 21, 22, 24, 28, 29, ஜூலை 1 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-மதுரைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06157) ஜூன் 18, 20, 25, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளது. மதுரை-சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்( 06158) ஜூன் 17, 19, 24, 26 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

சென்னை எழும்பூா்-தஞ்சாவூா்(06865), சென்னை சென்ட்ரல்-மேட்டுபாளையம் (02671),

சென்னை எழும்பூா்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில்(06851), சென்னை எழும்பூா்-மன்னாா்குடி சிறப்பு ரயில்( 06179) உள்பட 25 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT