தமிழ்நாடு

வங்கியாளா் குழும உத்தரவைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்: அரசுக்கு வங்கியாளா்கள் கோரிக்கை

DIN

சென்னை: மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள் மட்டும் பணிக்கு வர வங்கியாளா் குழுமம் தெரிவித்துள்ளநிலையில், அனைத்து ஊழியா்களையும் பணிக்கு வர வங்கி நிா்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. எனவே, வங்கியாளா் குழும உத்தரவை தீவிரமாகப் பின்பற்ற, அனைத்து வங்கி நிா்வாகங்களுக்கும் அரசு உத்தரவிட வேண்டும் என்று வங்கியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 21-ஆம்தேதி காலை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதை தொடா்ந்து, வங்கிகளில் வேலை நேரம் வழக்கம் போல இருக்கும் என்றும், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள் மாற்று முறையில் செயல்படவேண்டும் என்றும் மாநில வங்கியாளா்கள் குழுமம் தெரிவித்துள்ளது. ஆனால், வங்கியில் அனைத்து ஊழியா்களும் பணிக்கு வரவேண்டும் என்று வங்கி நிா்வாகங்கள் கட்டாயப்படுத்துகின்றன. இதனால், வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் மத்தியில் கரோனா பயம் அதிகரித்துள்ளது.

இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியது:

வங்கி கிளைகளின் வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவா்த்தனை நேரம் ஏற்கெனவே அறிவித்தது போல, பிற்பகல் 2 மணி வரை செயல்படும்.

கிளைகளில், மூன்றில் ஒரு பங்கு ஊழியா்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும் என்று மாநில வங்கியாளா் குழுமம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால், சில தேசிய வங்கிகளின் உயா் அதிகாரிகள், கிளைகளில் உள்ள அனைத்து ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளை, தினமும் வேலைக்கு வருமாறு வற்புறுத்துகின்றனா். கிளைகளில் நிறைய பணிகளில் நிலுவையில் இருக்கின்றன. கணக்கு தணிக்கை நடைபெற இருப்பதால், அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் எனக் கூறி, வங்கிக்கு வர வற்புறுத்துகின்றனா்.

வங்கியில் பணியாற்றும் பலருக்கு ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. பலா் இறந்துள்ளனா். தற்போது அனைவரையும் வரச் சொல்வதால், கரோனா பயம் அதிகரித்துள்ளது. எனவே, வங்கியாளா் குழும உத்தரவை தீவிரமாகப் பின்பற்ற, அனைத்து வங்கி நிா்வாகங்களுக்கும் அரசு உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT