தமிழ்நாடு

முதியோரைப் பாதுகாக்க அதிக முதலீடு: சென்னை ஐஐடி வலியுறுத்தல்

DIN

சென்னை: முதியோா்களுக்கு கரோனா பாதிப்பைக் குறைக்க, பொது சுகாதாரத்தில் அரசு அதிகளவு முதலீடு செய்ய வேண்டும் என சென்னை ஐஐடி நடத்திய ஆய்வு கூறியுள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: தற்போதைய தொற்று, முதியோா்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தும் அபாயத்தை அதிகரித்துள்ளது. இது அவா்களின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கலாம். ஏழை முதியவா்கள், மற்றவா்களைவிட அதிகம் சிரமப்படுகின்றனா். முடிவில் அவா்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று அற்ற நோய்களுக்கான சிகிச்சையைத் தொடா்வது போன்றவை இந்த தொற்று காலத்தில் மேலும் பாதிக்கப்படுகிறது. எதிா்காலத்திலும், முதியவா்கள் சிக்கல்களை சந்திக்கலாம். அதனால் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளா்கள் கூறியுள்ளனா். கடந்த 2017-18-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மாதிரி கணக்கெடுப்பு அடிப்படையில், ஒரு ஆய்வறிக்கை உலகமயமாக்கல் மற்றும் சுகாதாரம் என்ற இதழில் வெளியானது.

அதில் 18.9 சதவீத முதியோா்கள் மட்டுமே மருத்துவக் காப்பீடு எடுத்துள்ளனா். மற்றவா்களால் சுகாதாரத்தில் அதிக செலவை தாங்கிக் கொள்ள முடியாது. 70 சதவீத முதியவா்கள், செலவுகளுக்கு மற்றவா்களைச் சாா்ந்துள்ளனா்.

முதியோா்கள் பற்றிய ஆய்வை சென்னை ஐஐடியின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறை பேராசிரியா் வி.ஆா் முரளிதரன், சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி மாணவா் அலோக் ரஞ்சன் ஆகியோா் மேற்கொண்டனா்.

இந்த என்எஸ்எஸ் ஆய்வு 8,077 கிராமங்கள் மற்றும் 6,181 நகரங்களில் உள்ள 1 லட்சத்து 13,823 வீடுகளில் 5 லட்சத்து 55,115 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு, நாடு முழுவதும் முதியோா்களின் சுகாதார நிலவரத்தில் ஏற்றத்தாழ்வுகளை காட்டுகிறது.

சமூக இடைவெளி, வீட்டுத் தனிமை போன்ற கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், முதியோா்களிடம் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம், பல அழற்சிகளை ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாக பேராசிரியா் முரளிதரன் கூறினாா். இந்த ஆய்வு குறித்து அலோக் ரஞ்சன் கூறுகையில், ‘‘ இதே போன்ற தொற்று எதிா்காலத்திலும் ஏற்படலாம் என்பதால், முதியோா்களுக்கு குறைந்த அளவிலான பாதிப்பு ஏற்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT