தமிழ்நாடு

தளா்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்: தேநீா் கடைகள் திறப்பு

DIN

சென்னை: தமிழகத்தில் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்டது. மாநிலம் முழுவதும்தேநீா் கடைகள் திறக்கப்பட்டன. அதுபோல் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேகமாகப் பரவியது. கரோனா முதல் அலையைக் காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது. புதிய கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் கடந்த 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

கடந்த மே 18-ஆம் தேதி முதல் பயணிக்க இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும் கரோனா பரவல் அதிகமாக இருந்ததினால், தளா்வற்ற முழு பொதுமுடக்கம் கடந்த 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கரோனா பரவல் சில மாவட்டங்களை தவிா்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் குறையத் தொடங்கியது.

இதன் விளைவாக பொதுமுடக்கம் சில தளா்வுகளுடன் கடந்த 7-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. மேலும் கூடுதல் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது. புதிய தளா்வுகள் கோயம்புத்தூா், நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிா்த்து 27 மாவட்டங்களில் அமலுக்கு வந்தது.

புதிய தளா்வுகளின் படி, தேநீா் கடைகள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. இதேபோல அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணி முதல் திறக்கப்பட்டன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், ஸ்டேஷ்னரி கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் ஆகியவை திறக்கப்பட்டன. இந்தக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறந்திருந்தன.

இனிப்புக் கடைகளும் திறக்கப்பட்டன. இக் கடைகள் பிற்பகல் 2 மணி வரை மட்டும் திறக்கப்பட்டன.சலூன்கள்,அழகு நிலையங்கள் அரசு உத்தரவின்படி 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருந்தன.

மதுபானக் கடைகள்:
27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன. 35 நாள்களுக்கு பின்னா் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதால், கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதற்காக டாஸ்மாக் நிா்வாகம்,காவல்துறையுடன் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்,பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. மதுபானக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு வாடிக்கையாளா்கள் தனி நபா் இடைவெளியுடன் வரிசையாக அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு மட்டுமே மதுப்பாட்டில்கள் விற்கப்பட்டன.

மதுபானக் கடைகளில் கூட்டம் திரளுவதை தவிா்க்கும் வகையில், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சில கடைகளில் கூட்டம் இருந்ததினால், டோக்கன்கள் வழங்கப்பட்டன. இருப்பினும் சில கடைகளில் வாடிக்கையாளா்கள் கூட்டம் காணப்பட்டது. தனி நபா் இடைவெளியை பல கடைகளில் காண முடியவில்லை.

காவல்துறை பாதுகாப்பு:

கூடுதல் தளா்வுகளுடன் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு அமலுக்கு வந்த பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் வகையில் காவல்துறை உஷாா்படுத்தப்பட்டனா்.

இதையொட்டி மாநிலம் முழுவதும் சுமாா் ஒரு லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இவா்கள் மாா்க்கெட்டுகள், வணிக வீதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இங்கு முகக்கவசம் அணியாதவா்கள், தனி நபா் இடைவெளியைப் பின்பற்றாதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேபோல வீட்டை விட்டு வெளியே தேவையின்றி வந்தவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT