தமிழ்நாடு

மருத்துவப் பரிசோதனை: சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி

15th Jun 2021 06:03 AM

ADVERTISEMENT


சென்னை:  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினி உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு முடித்து ஹைதராபாதிலிருந்து கடந்த மாதம் சென்னை திரும்பிய ரஜினி,  அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். 
 கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் 2 } இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற நாள். மும்பையில் நடந்த அந்த இறுதிப் போட்டியை நேரில் காண ரஜினிகாந்த் சென்றிருந்தது அனைவருக்கும் தெரியும். அந்தப் பயணத்தின் போது ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, சிங்கப்பூர் சென்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 10 ஆண்டுகள் ஆவதை அடுத்து மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த். அங்கே அவரின் சிறுநீரக செயல்பாடு குறித்த பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது. அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக,  சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.

இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்துக்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி. இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT