தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி: மளிகை தொகுப்புடன் ரூ. 2 ஆயிரம் வழங்கும் நிகழ்வு தொடக்கம்

15th Jun 2021 10:57 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள 121 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் 60,411  ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரணமாக 14வகையான மளிகை தொகுப்பு, இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் நிகழ்வை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.

தமிழக அரசு கரோனா கால சிறப்பு நிவாரண நிதியாக இரு கட்டங்களில் 4000 ஆயிரம் ரூபாய் மற்றும் சர்க்கரை, கோதுமை மாவு, உப்பு, ரவை, உளுந்தம்பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப்பு, துணி சோப்பு என 14 வகை மளிகை தொகுப்பை அறிவித்திருந்தது.

கடந்த மே மாதம் 10-ஆம் தேதியில் துவங்கி முதல் கட்டமாக கும்மிடிப்பூண்டியில் 60,411 அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல்கட்டமாக அரசின் 2000ரூபாய் கரோனா சிறப்பு நிவாரணமாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட நிவாரண தொகை 2000 ரூபாய் மற்றும் 14 வகை மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்வு கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேட்டில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. வட்டாட்சியர் ந.மகேஷ் வரவேற்றார்.

ADVERTISEMENT

நிகழ்விற்கு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், தேவி கஜேந்திரன், வார்டு உறுப்பினர்கள்   யசோதா சதீஷ், நாகராஜ், நிர்மலா ஜீவா, விஜயகுமார், சோலையம்மாள், மல்லிகா, உதயகுமார் முரளி , ஊராட்சி செயலாளர் சாமுவேல், கூட்டுறவு துறை சார் பதிவாளர் வெங்கட்ரமணன், கூட்டுறவு சங்க தலைவர் நாகமுத்து முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கீழ்முதலம்பேடு ஊராட்சியை சேர்ந்த 2,500 ரேஷன் அட்டை தாரர்களுக்கு 14 வகை மளிகை தொகுப்பு, இரண்டாம் தவணை நிவாரணம் 2 ஆயிரம் ரூபாயை வழங்கினார். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் சதீஷ்குமார், லட்சுமணன், குப்பன், கோதண்டன், கிருபாகரன், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து மேல்முதலம்பேட்டில் ஊராட்சி தலைவர் ஜோதி ஏழுமலை , ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ஏற்பாட்டிலும், ஏ.என்.குப்பம் மற்றும் ஆர்.என்.கண்டிகையில் ஊராட்சி தலைவர் அம்மு விநாயகம், ஊராட்சி செயலாளர் தங்கதுரை ஏற்பாட்டிலும், கெட்ணமல்லி, ஐயர் கண்டிகையில் ஊராட்சி தலைவர் சீனிவாசன்,  ஊராட்சி செயலாளர் கணபதி ஏற்பாட்டிலும், தண்டலச்சேரியில் ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ், ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி ஏற்பாட்டிலும் அரசின் இரண்டாம் கட்ட நிவாரண தொகை 2ஆயிரம் மற்றும் 14வகை மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திருமலை, பூண்டி ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர், மோகன்பாபு, சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT