தமிழ்நாடு

திருவள்ளூர்: குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகப் புகார்; எம்.எல்.ஏ ஆய்வு

15th Jun 2021 11:12 AM

ADVERTISEMENT

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதாக வந்த புகாரை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

 திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 23, 24, 25 ஆகிய வார்டு பகுதிகளில் குடியிருப்புகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து வருவதால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதோடு சுகாதார கேடுகளை ஏற்படுத்துவதாகவும் எம்.எல்.ஏ மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளுக்கு எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி ஆணையாளர் சந்தானம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, குடிநீர் குழாய்கள் கழிவு நீர் வாய்க்கால் ஓரத்தில் செல்லாத வகையில் உடனே நிவர்த்தி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதேபோல், கழிவு நீர் வாய்க்காலில் குப்பைகள் தேங்க விடாமல் அவ்வப்போது அகற்றவும் தூய்மை பணியாளர்கள் அறிவுரை வழங்கினார்.

ADVERTISEMENT

அப்போது, நகர செயலாளர் சி. சு. ரவிச்சந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் பொன்.பாண்டியன், வி.எஸ்.நேதாஜி, லோட்டஸ் கோபி, நகரமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ப.முரளி, ஜி.சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT