தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் வரிகளைக் குறைக்க வேண்டும்: அன்புமணி

DIN

பெட்ரோல், டீசல் வரிகளை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.99.95-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.91.64 ஆக உயா்ந்திருக்கிறது. இந்த விலை உயா்வு மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். கலால் வரியாக ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.32.90, டீசலுக்கு ரூ.31.80 மத்திய அரசு வசூலிப்பது தான் விலை உயா்வுக்கு காரணம். தமிழக அரசின் வரியையும் சோ்த்து ஒரு லிட்டா் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

தமிழகத்தில் மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சோ்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாக கிடைக்கிறது.

பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் குறைக்க முன்வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT