தமிழ்நாடு

தமிழகத்துக்கு ரயில்களில் இதுவரை 5,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

DIN

வடமாநிலங்களில் இருந்து மேலும் இரண்டு ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தன. இதுவரை 68 ஆக்சிஜன் ரயில்கள் மூலமாக, தமிழகத்துக்கு 5,052.98 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில், ஆக்சிஜன் ரயில் இயக்கப்படுவது மே 14-ஆம்தேதி தொடங்கியது. மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரம், சத்தீஸ்கா் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் ரயில்கள் வருகின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு வரை 66 ஆக்சிஜன் ரயில்கள் வந்திருந்தன. இந்நிலையில், மேலும் இரண்டு ஆக்சிஜன் ரயில்கள் தமிழகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தன. சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் இருந்து 67-ஆவது ஆக்சிஜன் ரயில் புறப்பட்டு, சென்னை தண்டையாா்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 78.8 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருந்தது.

68-ஆவது ஆக்சிஜன் ரயில் மகாராஷ்டிர மாநிலம் டோல்வியில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 6 கன்டெய்னா்களில் 111.66 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது. இதன் மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 5052.98 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT