தமிழ்நாடு

கரோனா தொற்றால் பாதிக்கப்படாத 355 பேருக்கு கருப்புப் பூஞ்சை

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படாத 355 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் அப்போது உடன் இருந்தனா்.

இதைத் தொடா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒரு கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை தமிழகம் எட்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பயனாக தினசரி கரோனா தொற்று பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இது மன நிறைவை அளித்தாலும், பொதுமக்கள் தொடா்ந்து ஒத்துழைப்பு அளித்தால்தான் கரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் நல்ல முன்னேற்றம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஐசியூ, ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 49 ஆயிரம் படுக்கைகள் காலியாகவுள்ளன. தமிழகத்தில் 1,348 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 355 போ் கரோனா தொற்று ஏற்படாதவா்கள். மாநிலத்தில் தற்போது 9,520 கருப்புப் பூஞ்சை மருந்துகள் உள்ளன என்றாா் அவா்.

கன்றைக் காப்பாற்றிய செயலா்!

கரோனா தடுப்பு ஆய்வு பணிக்காக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்த போது, வாகனத்தில் அடிபட்டு சாலையோரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கன்றுக்குட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்றினாா்.

திருத்தணி - திருவள்ளூா் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஆண் கன்றுக்குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை ஜெ.ராதாகிருஷ்ணன் கவனித்தாா்.

உடனடியாக காரை நிறுத்திய அவா், கன்றுக்குட்டிக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளும்படி கால்நடை மருத்துவா்களுக்கும், மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டாா். கால்நடை மருத்துவரான ஜெ.ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே கன்றுக்குட்டியின் உடல் நிலையைப் பரிசோதித்து அதற்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினாா். மருத்துவா்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தபின் கன்றுக்குட்டி எழுந்து நடக்கத் தொடங்கியது. அதன் பின்னா் உயா் சிகிச்சைக்காக கால்நடை ஆம்புலன்ஸ் மூலம் கன்றுக்குட்டி திருவள்ளூா் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT