தமிழ்நாடு

நீட் தேர்வால் பாதிப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை: நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி

DIN

நீட் தேர்வால் பாதிப்பு இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அது எத்தகைய பாதிப்பு என்பதை மட்டும்தான் ஆராய வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குழுவில் உள்ள 8 பேரும் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் தேர்வால் பாதிப்பு உள்ளதாக குழுவில் உள்ள 8 பேரும் தெரிவித்து உள்ளனர். எனவே நீட் தேர்வால் பாதிப்பு இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அது எத்தகைய பாதிப்பு என்பதை மட்டும்தான் ஆராய வேண்டும். 

நீட் தேர்வின் தாக்கம் குறித்து விபரங்களை சேகரித்து வருகிறோம். மேலும் 21-ம் தேதி நடைபெறும் 2-வது கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT