தமிழ்நாடு

கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

14th Jun 2021 01:45 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் குறையும் வரை கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா பரவல் குறையும் வரை மக்கள் நலன் கருதி கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

கரோனா இரண்டாவது அலை பரவலைத் தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில், கரோனா இரண்டாவது அலை பரவல் தடுப்புக்கான புதிதாக விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், விமான பயணத்துக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொது நலன் கருதி கரோனா கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : coronavirus கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT