தமிழ்நாடு

மதுக்கடைகள், சலூன்கள் திறப்பு 

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக், சலூன் கடைகள் இன்று திறக்கப்பட்டன. 

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 21-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் இன்று முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மற்றும் சலூன் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன. 

சமூக இடைவெளியுடன் மது வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் மதுப் பிரியர்கள். இடம் திருவேற்காடு.

மதுக்குடிப்போர் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைகள் முன்பு காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT