தமிழ்நாடு

நீட் தேர்வின் தாக்கம்: நீதிபதி ஏ.கே.ராஜன் குழு ஆலோசனை

14th Jun 2021 12:58 PM

ADVERTISEMENT

நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து  ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் 9 பேர் கொண்ட குழு, மாணவர்களிடத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. 

முன்னதாக தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம், நீட் தேர்வுக்குப் பதிலாக மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

குழுவின் உறுப்பினர்களாக மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : neet exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT