தமிழ்நாடு

உதயமானது சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

DIN


தமிழில் சிறாருக்காக எழுதும் படைப்பாளிகள், செயற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், கதை சொல்லிகள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

இணைய வழியில் நடைபெற்ற சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், இணைய வழி சிறார் குழுக்கள், சிறார் செயற்பாட்டாளர்கள், பார்வையாளர்கள் என 250-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

சிறார் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் உதயசங்கர் சங்கத்தின் தலைவராகவும், சிறார் எழுத்தாளர், செயற்பாட்டாளர் விழியன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளனர். சங்கத்தின் பொருளாளராக பஞ்சு மிட்டாய் இதழ் இணையதள ஆசிரியர், செயற்பாட்டாளர், எழுத்தாளர் பிரபு இருக்கிறார்.

மாநாட்டுக்குத் தலைமையேற்ற உதயசங்கர், சங்கத்தின் தேவையையும் படைப்பாளிகள் ஒன்றிணைவதன் அவசியத்தையும் விளக்கினார். பொதுச்செயலாளர் விழியன், குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிப்பதோடு, அவர்களை எழுதத் தூண்டும் செயல்களை சங்கம் முன்னெடுப்பது உள்ளிட்டவை பற்றி எடுத்துரைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT