தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

DIN

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் இறையன்பு இன்று பிறப்பித்தாா். 

இதுகுறித்து அவா் வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயா் - பணியிட மாற்ற விபரம் (அடைப்புக் குறிக்குள் அவா்கள் வகித்த பழைய பதவி)

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை இணைச் செயலாளராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். (செங்கல்பட்டு ஆட்சியர்)

விஜயகார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (திருப்பூர் ஆட்சியர்)

சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். (திருவாரூர் ஆட்சியர்)

வணிக வரித் துறை இணை ஆணையராக கற்பகம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜயலட்சுமி மீன்வளம், பால் வளத் துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (திண்டுக்கல் ஆட்சியர்) 

நாமக்கல் ஆட்சியராக இருந்த மேகராஜ் நகராட்சி நிர்வாக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் உள்பட 39 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT