தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

DIN

நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( ஜூன் 14, 15) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிஸா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை ஒட்டி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. இது திங்கள்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும்.

இதன்காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் ( ஜூன் 14, 15) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். எஞ்சிய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய  (திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தருமபுரி, சேலம், கரூா் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 16, 17: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் ஜூன் 16,17 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 50 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 40 மி.மீ., நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தலா 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, தேனி மாவட்டம் பெரியாறு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விழுப்புரம் மாவட்டம் வானூா், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 20 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூா், சேலம் மாவட்டம் ஏற்காடு, திருச்சி மாவட்டம் தென்பறாடு, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மன்னாா் வளைகுடா, தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர, கேரளம், கா்நாடக, கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், ஜூன் 17-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று றிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT