தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும்: புதிய மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்

DIN

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என்று புதியதாக பொறுப்பேற்ற மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராகப் பணியாற்றி வந்த க.சிவகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த கிராந்திகுமாரை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக தமிழக அரசு நியமித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக கிராந்திகுமார் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். இதன்பிறகு மாநகராட்சி பகுதி பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படத்தன்மையுடன் செயல்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டல உதவி ஆணையாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT