தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி 27 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. அதன்படி, காலை 10 முதல் மாலை 5 வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,

டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில்லறையாகவே விற்பனை செய்யவேண்டும். 

ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது.

மதுபானம் வாங்க வருவோர் வரிசையில் நிற்க ஏதுவாக தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை இரண்டு பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும். 

பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

மேலும் கடைகளைத் திறக்கும்போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT