தமிழ்நாடு

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு: புகழேந்தி

13th Jun 2021 08:13 PM

ADVERTISEMENT

6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், போளூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் பொருட்டாக மதிப்பதில்லை என பாமகவின் அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

அவர் பேசுவது பற்றி கவலையில்லை. ஆனால், ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் இன்று அன்புமணி எம்.பி.,ஆக உள்ளார். 

தவறாக ஒரு கட்சியை பேசக்கூடாது. 10 தொகுதியை முன்னாள் அமைச்சர் வேலுமணி வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 9 தொகுதியை வென்றுள்ளார். 37 இடங்கள் கொங்கு மண்டலத்தில் இருந்து வந்துள்ளது. பாமகாவால் முடியவில்லை.

ADVERTISEMENT

ஒரு கூட்டணியில் சேருவது வெளியே வருவது, பிறகு எங்களால்தான் எல்லாம் நடந்தது என செல்வது பாமகவின் வாடிக்கையாக போய்விட்டது. 

எனவே எங்களது தலைவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். 
 

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT