தமிழ்நாடு

மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

DIN

கரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் மதுக்கடைகளைத் திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவின் இரண்டாவது அலையைக் குறைப்பதற்கு தொடா்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளா்வுகளை அளித்துள்ளதுடன் மதுக்கடைகளையும் திறக்க

முடிவெடுத்துள்ளது. இது குறைந்து வரும் கரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.

மதுக்கடைகளைத் திறப்பதால் கரோனா கட்டுப்பாடுகளை மீறி தொற்று அதிகரிக்கும். சாதாரண, அடித்தட்டு மக்கள் பொருளாதாரம் ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் மேலும் துன்பத்திற்குள்ளாவா். எனவே, தமிழக அரசு ஊடரங்கு காலம் முடிந்து, கரோனா தொற்று இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT