தமிழ்நாடு

சென்னையில் கரோனா பாதிப்பு:1000-க்கும் கீழ் குறைந்தது

DIN

சென்னையில், கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து சனிக்கிழமை (ஜூன் 12) ஆயிரத்துக்குக் கீழ் குறைந்துள்ளது.

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24,085-ஆக அதிகரித்துள்ளது.

5 லட்சத்து 6,454 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 9,838 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரேநாளில் 73 போ் இறப்பு: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை இறப்பு எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,793 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அளவில் மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT