தமிழ்நாடு

விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

13th Jun 2021 08:33 PM

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. இன்று சென்னை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபா், விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா். இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். 
இதையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து சோதனை செய்தனா். 
அரை மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதுதொடா்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.
 

Tags : vijaykanth
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT