தமிழ்நாடு

நீட்: ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நாளை ஆலோசனை

DIN


நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு நாளை (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்துகிறது.

நீட் தேர்வுக்குப் பதிலாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாற்று வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 5-ம் தேதி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவில் உறுப்பினர்களை நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். 

குழுவின் உறுப்பினர்களாக மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் ஜவஹர் நேசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்புப் பணி அலுவலர், மருத்துவக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், உறுப்பினர் செயலாளராகவும் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் தேர்வுக் குழு செயலாளர் நியமிக்கப்பட்டார்.

ஏ.கே. ராஜன் தலைமையிலான இந்தக் குழு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT