தமிழ்நாடு

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

DIN

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களில் சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் நாளை(திங்கள்) முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர கரோனா பரவல் குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு இந்த தளர்வுகள் பொருந்தும். 

அதன்படி, காலை 6 முதல் மாலை 5 வரை தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ், சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி

கட்டுமானப் பணிகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்சல் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

SCROLL FOR NEXT