தமிழ்நாடு

ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

13th Jun 2021 07:17 PM

ADVERTISEMENT


திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையம், புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டடத்தை சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியாதாவது: தமிழ்நாடு முழுவதும் தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நாளொன்று 400-க்கும் கீழ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 13 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சனிக்கிழமை வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு இறுதிக்குள் 4 அல்லது 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பொறுத்த வரை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 3 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 70 ஆயிரத்து 817 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், ஆக்சிஜன் வசதியுடன் 72 படுக்கைகளும், சாதாரண படுக்கை வசதிகள் 69 சதவீதமும், ஐசியூ படுக்கை வசதிகள் 44 சதவீதம் கூடுதலாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது அலை பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு  தற்போதுள்ள நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்த வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியை 84 நாள்களுக்குப் பிறகே போட்டுக் கொள்ள வேண்டும் என  டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags : Health Secretary Tamilnadu 5 crore vaccines
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT