தமிழ்நாடு

தமிழகத்தில் 1.01 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மா. சுப்பிரமணியன்

DIN


தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1.01 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்து பேசியது:

"தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஒருநாளில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி எண்ணிக்கைகளில் இதுவே அதிகபட்சம்.

அரசு ரூ. 100 கோடி பணம் செலுத்தி வாங்கிய தடுப்பூசிகள் உள்பட இதுவரை மொத்தம் 1,10,41,030 தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளன. இதில் 1,01,30,594 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பில் 5,39,780 தடுப்பூசிகள் உள்ளன."

இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான எதிர்ப்புகள் குறித்து பதிலளித்தது: 

"தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டிய நிலையிலேயே மதுக் கடைகள் மூடப்பட்டன. உச்சத்தைத் தொட்டபோதும் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன. தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்து வரும் நிலையில்தான், திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

ஆனால், கடந்த ஆட்சியில் முதல் அலை தொடங்கி உச்சம் தொட்ட போதிலும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தபோதிலும் மதுக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த நிலை இல்லை என்பது அனைவரும் அறிவர்.  

மதுக் கடை திறப்புக்கு முதலில் தாங்கள் அங்கம் வகிக்கும் புதுவை அரசை நோக்கி பாஜக கேள்வி எழுப்பி கருப்புக் கொடி காட்டட்டும்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT