தமிழ்நாடு

தேநீர் கடைகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

12th Jun 2021 06:14 PM

ADVERTISEMENT

தேநீர் கடைகளுக்கு விலக்கு அளிக்கக் கோரி மார்க்சிஸ்ட்யின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட்யின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் தமிழக அரசு தடுப்பூசி தயாரிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தேநீர் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தள்ர்வுகளில் தொற்றுக் குறைவாக உள்ள 27  மாவட்டங்களில் அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தேநீர் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : Marxist Communist Party
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT